Sunday, December 1, 2013

டோரன்ட்களை தரவிறக்கம் செய்ய மாற்று வழி (மற்றும்) IDM ல் டோரன்ட்களை பதிவிறக்கம் செய்ய



முதலில் டோரன்ட் என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன், இதைப்பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டோரன்ட் என்பது மென்பொருள்கள், திரைபடங்கள், விளையாட்டுமென்பொருள்கள், மின்னனு புத்தகங்கள், கோப்புகள் மற்றும் பல்வேறு தகவல்களை யாருடைய அனுமதி இன்றியும் தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் ஒரு எளிய வழிமுறை ஆகும். நாம் எவ்வாறு இணையத்தில் தகவல்களை தேட கூகுள் தளத்தினை நாடுகின்றோமோ அதைபோல் டோரன்ட் பைல்களை தேட நாம் செல்ல வேண்டியது Torrentz தளமாகும். இந்த தளத்தில் அனைத்து வித டோரன்ட்களுக்கும் இணைப்பு நிச்சயம் இருக்கும். சரி டோரன்ட் பைல் என்பது KB அளவில் இருக்கும். இதை கொண்டு எவ்வாறு முழுகோப்பினையும் பதிவிறக்கம் செய்வது என்றால் அதற்கும் சில மென்பொருள்கள் உள்ளது அதில் புகழ்பெற்ற மென்பொருள்கள் UTorrent, Bittorrent ஆகியவை ஆகும். இந்த மென்பொருள்கள் உதவியுடன் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கத்தின் வேகம் சற்று குறைவாக இருக்கும்.
சரி, டோரன்ட்களை கொண்டு முழுகோப்புகளையும் தரவிறக்கம் செய்ய மாற்று வழி உண்டா என்றால் நிச்சயம் இருக்கிறது. டவுண்லோட் மேனேஜர்களின் உதவியுடன் அதிவேகமாக டோரன்ட் முழுகோப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு சில இணைய மையங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த டோரன்ட் கோப்புகளை தரவிறக்கம் செய்ய தடை செய்து இருப்பார்கள். அந்த தடையை உடைத்து டோரன்ட் முழுக்கோப்புகளையும் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பற்றியும் இந்தக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

முதலில் டோரன்ட் தேடுதளத்தில் குறிப்பிட்ட டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்யவும்.
Torrentz தளத்திற்கான சுட்டி 



Torrentz தளம் சென்று வேண்டிய டோரன்ட் பைலை தேடி பெறவும். சான்றாக நான் Autocad 2008 யை டவுண்லோட் செய்ய டோரன்ட் பைலை தேடினேன். அதற்கான டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய Torrentz தளம் சென்று Autocad 2008  என்று உள்ளிட்டு தேடினேன், அதில் பல்வேறு Autocad 2008 கான டோரன்ட்களுக்கான இணைப்பு கிடைத்தது. அதில் rating , peers அதிகம் உள்ள டோரன்ட் இணைப்பினை தேர்வு செய்யவும். இவ்வாறு தேர்வு செய்வதனால தரவிறக்கத்தின் வேகம் அதிகம் ஆகும்.

அடுத்து நீங்கள் தேர்வு செய்த டோரன்ட் பைல் இருக்ககூடிய அனைத்து முகவரியும் காட்டும். அதில் விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும்.





பின் டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்கும். அதை பயன்படுத்தி டோரன்ட் பைலை தரவிறக்கி கொள்ளவும்.
        
அடுத்து நாம் செய்ய வேண்டியது டவுண்லோட் மேனேஜரை கணினியில் நிறுவ வேண்டும். புகழ்பெற்ற டவுண்லோட் மேனேஜர்களில் ஒன்று இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜர் (IDM) ஆகும். ஏற்கனவே உங்கள் கணினியில் இருந்தால் அப்படியே விட்டு விடவும். இல்லையெனில் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
IDM தரவிரக்கம் செய்ய சுட்டி
  
அடுத்து செய்ய வேண்டியது  zbigz தளம் சென்று டோரன்ட் பைலை பதிவேற்றம் செய்து  பதிவிறக்க சுட்டி பெற வேண்டியது மட்டுமே ஆகும்..

தளத்திற்கான சுட்டி



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இலவச பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் Upload torrent file என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட டோரன்ட் பைலை தேர்வு செய்து Go பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் கழித்து தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். Download என்னும் பொத்தானை அழுத்தவும். 



அடுத்து தோன்றும் விண்டோவில் Free எனும் இணைப்பினை அழுத்தவும். அதன் பின் நேரிடையாக இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜரில் பதிவிறக்கம் ஆகும்.

வழக்கம்போல் பதிவிறக்கம் முடிந்தவுடன் குறிப்பிட்ட பைலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்



இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு நேரம் இல்லை.

கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கிறது.

ஆண், பெண் இருவரும் பொருளாதாரத்தில் பெற்றோரை சாராமல் இருந்துவிட்டால் அவர்களின் சம்மதத்தை கூட கேட்காமல் அவசரமாக நான்கு நண்பர்கள் முன்னிலையில் ஆயிரம் காலத்து பயிரினை நடத்து வங்குகிறார்கள்.

உங்கள் காதல் உண்மையாக இருந்து இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் பிரச்சனை இல்லை.அதுவே வயதால் ஏற்படும் சலனத்தால் காதலித்து அது திருமணத்தில் முடிந்து இல்லற வாழ்வில் பிரச்சனை வரும்போதுதான் பெற்றோரின் நினைவு வரும்.

காலம் கடந்த பிறகு இதையெல்லாம் யோசித்து சங்கடபடுவதை விட காதலிக்கும்போதே அதை பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வது நல்லது.உங்கள் காதல் நிலைப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவர்.

இவை எல்லாவற்றையும் விட இருவீட்டாரின் சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனும் நடக்கும் திருமணம் நீடித்து நிலைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க சில முறைகளை கையாளலாம். அவற்றில் சில,
1.
பெற்றோருக்கு சிறிது நேரம் கொடுங்கள்.
2.
அவர்கள் உங்கள் காதலரை வெறுக்கும் காரணத்தை கண்டறியுங்கள்.
3.
உங்கள் காதலரிடம் இதைபற்றி பேசாதீர்கள்.
4.
உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுங்கள்.
5.
அவர்களின் இடத்திலிருந்து யோசியுங்கள்.
6.
உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.
7.
பெற்றோரை வெறுத்துவிடாதீர்கள்.
8.
பொறுமையாக இருந்து உங்கள் காதலை நிரூபியுங்கள்.
9.
அவர்களின் விருப்பபடி உங்கள் காதலரின் நடவடிக்கைகளை மாற்றமுடியுமா என்று பாருங்கள்.
10.
உங்களது பெற்றோர் உங்களுக்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

சில நேரங்களில் இவை அனைத்தும் உபயோகப்படாமல் போகலாம். பெற்றோர்கள் வறட்டு கெளரவம், அந்தஸ்து போன்ற காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது கலைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை தேர்தெடுங்கள்.