Showing posts with label EDUCATION. Show all posts
Showing posts with label EDUCATION. Show all posts

Monday, March 18, 2013

கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்

கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் வரை
அனைவருக்கும் உடனடியாக உதவி செய்ய ஒரு இணையதளம்
வந்துள்ளது. எண்ணற்ற தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம் தான்
என்று சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு சிறிய பிராஜெக்ட் முதல்
பெரிய பிராஜெக்ட் வரை அனைத்தும் எங்கும் சென்று தேட வேண்டாம்
உடனடியாக கிடைக்கிறது.தேடுதலில் கூகிள் ஒரு பெரிய கடல் தான். ஆனால் சில நேரங்களில்
இந்த கடலில் சென்று முத்தெடுக்க கூட நம்மால் முடியவில்லை.
தகவல் கிடைப்பதற்கு முன் சில குப்பைகள் தான் முதலில்
தோன்றுகிறது.பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள் சில
ஆராய்ச்சி பிராஜெக்ட் செய்ய அடிக்கடி கூகுளில் சென்று தேடிக்
கொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் நாம் தேடுவதை கூகுள்
கொடுக்கிறது சில நேரங்களில் நாம் தேடும் பிராஜெக்ட் பற்றிய எந்த
தகவலும் கிடைப்பதில்லை அல்லது பொருந்தாத தகவல் கிடைக்கிறது
இப்படி நாம் தேடும் தகவல் கூகுளில் இல்லாதபட்சத்தில் இந்த
இணையதளத்திற்கு சென்று தேடலாம். உடனடியாக ஆராய்ச்சி
பிராஜெக்ட் மற்றும் தகவல்களை மிகச்சரியாக கொடுக்கிறது.
விவசாயத்திலிருந்து பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள்
வரை அனைவருக்கும் தேவையான பிராஜெக்ட் தனித்தனி வகையாக
பிரித்து வைக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன் நண்பர்கள் பல
பேர் ஆராய்ச்சி செய்யவதாகவும் போதுமான அளவு தகவல்களை
பெற ஏதாவது இணையதளம் உள்ளதா என்று கேட்டிருந்தீர்கள்
கண்டிப்பாக இந்த இணையதளம் உங்களுக்கு உதவும்.
இணையதள முகவரி :
http://www.intute.ac.uk

Sunday, March 10, 2013

online all books free download enjoy stutent

வாசிப்பதனால் மனிதன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான். வாசிப்பு தேடல்களுக்கென நூலகங்கள் இருக்கின்றபோதிலும் இன்றைய இணையயுகத்தில் இணையநூலகங்கள் மூலமாகவும் நாம் எமது அறிவுப்பசியினை தீர்த்துக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன.



அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்:

1. FreeBookSpot
FreeBookSpot இல் 4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி:  FreeBookSpot
http://www.freebookspot.in/




2.4eBooks
இந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: 4eBooks
http://4ebooks.org/



3.Free-eBooks
உயிரியல், சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல்,கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
இணையத்தளச்சுட்டி: Free-eBooks
http://www.free-ebooks.net/



4. GetFreeEBooks
கலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: GetFreeEBooks
http://www.getfreeebooks.com/


5. FreeComputerBooks
கணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள்,கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeComputerBooks
http://freecomputerbooks.com/



6. FreeTechBooks
கணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeTechBooks
http://www.freetechbooks.com/



7. KnowFree
இணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: KnowFree
http://knowfree.net/



8. OnlineFreeEBooks
பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: OnlineFreeEBooks
http://www.onlinefreeebooks.net


9. The Online Books Page
30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம்.
இணையத்தளச்சுட்டி: The Online Books Page
http://digital.library.upenn.edu/books/



10. BookYards
பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: BookYards
http://www.bookyards.com/






Saturday, March 9, 2013

ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள



ஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Tences Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.


அடுத்து Principal Part of Verbs  கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.


அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்..


அடுத்துள்ள Proverb கிளிக் செய்ய சுமார் 300 பழமொழிகள் தமிழ் -மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து  அதற்கான பழமொழியை தமிழில் அறியலாம். தமிழில் தட்டச்சு செய்து அதற்கான பழமொழியை ஆங்கிலத்தில் அறியலாம். மொத்தத்தில் ஆங்கிலம் பயில விரும்புவோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்

Friday, March 8, 2013

தமிழ் - ஆங்கிலம் அகராதிகள் (Tamil - English Dictionary)



தமிழ் - ஆங்கிலம் அகராதிகள் (Tamil - English Dictionary)

இணையத்தில் உலாவும் போதும் சரி, கணனி நுட்பத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் போதிலும் சரி, சில ஆங்கில சொற்களுக்கான தமிழ் அர்த்தம் தெரியாமல் எவ்வளவு சிரமம் அடைகின்றோம்? அப்படியான நேரங்களில் வீட்டில் இருக்கும் அகராதியை எடுத்து பக்கங்களை புரட்டி புரட்டி தேடிக்கொண்டிருப்போம். அதேவேளை அந்த அகராதியை நாம் போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. அவ்வாறான சமயங்களில் உடனடியாக உதவிக்கு வருவது இந்த இணைய தமிழ்-ஆங்கில அகராதிகள் தான்.


இதோ இந்த அகராதிகளை வழங்கும் இணையத்தளங்கள்.


http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp


http://www.tamil.net/learn-tamil/tamildic.html


http://www.tamildict.com/display.php?alphabet=search&by=A

Wednesday, March 6, 2013

Tuesday, March 5, 2013

Anna University, Chennai Nov / Dec 2012, January 2013 Results

06/03/2013 | 12:15 Am | -tamizhanaerokings Updates 
Anna University Results are Likely to Be Announced Soon Result Processing Work Is In Progress.  Anna University, Chennai Nov/Dec 2012 Results Has Again Delayed Due To Pending Work and Undisclosed Reason Sources Reveals That Results Will Be Announced Today Shortly (Results Delayed Lets Wait For Official Result Notification Page To Be Updated http://www.annauniv.edu/index.php Results in Next Half An Hour)

Anna University Results 1st, 3rd, 5th, 7th Sem Exam - Anna University Result 2013



05/03/2013 | 11:03 Pm | - tamizhan aerokings
Anna University Results are Likely to Be Announced Soon Result Processing Work Is In Progress. Anna University, Chennai Nov/Dec 2012/January 2013 Results Has Again Delayed Due To Pending Work and Undisclosed Reason Sources Reveals That Results Will Be Announced Tonight ( To Be Announced In One Hour (i.e) around 12:01 Am)

Monday, March 4, 2013

உலகின் கடினமான மொழிகளை இணையத்தில் சுலபமாக கற்க


ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்வதில் மொழி மிகவும் அவசியமாகிறது. இந்த மொழிகள் மனிதர்கள் மற்றும் அவர்களின் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. இது போன்று உலகில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இருக்கிறதாம். இதில் சில மொழிகளே உலகில் பெரும்பாலானவர்களால் பேசப்படுகிறது.



இப்படி உலகின் பிரபலமான மொழிகளை கற்று கொள்ள வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் கோச்சிங் சென்டர் போக நேரமும் அதிகமான பண விரயமும் பிரச்சினையாக இருப்பதால் பெருமாலானவர்கள் இதை தவிர்த்து விடுகிறார்கள். இதே சூழ்நிலையில் உள்ளவர்களா நீங்கள் இனி கவலை வேண்டாம் உலகின் கடினமான மொழிகளானEnglish, Dutch, French, German, Indonesian, Polish, Italian, Portuguese, Spanish, Swedish, Turkish போன்ற மொழிகளை உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் கணினியிலேயே கற்று கொள்ளலாம். முதலில் இலவமாக முயற்சி செய்து உங்களுக்கு பிடித்து இருந்தால் குறைந்த விலையில் முழுமையாக கற்று கொள்ளலாம்.


Babbel.com என்ற இணையதளம் இந்த அற்புதமான வசதியை வழங்குகிறது. ஒவ்வொரு வார்த்தையாக உங்களுக்கு தெரிவிக்கிறது அது மட்டுமின்றி அதை எப்படி உச்சரிக்க வேண்டுமென்ற உச்சரிப்பு ஒலியும் வருகிறது. 

இந்த தளத்திற்கு உங்களுக்கென ஒரு உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளவும். பிறகு நீங்கள் கற்று கொள்ள விரும்பும் மொழியின் மீது கிளிக் செய்து அந்த மொழியை ஒவ்வொரு படியாக பயிலலாம்.


மேலே உள்ள விலை பட்டியலில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து உங்களுக்கு வேண்டிய மொழியை முழுமையாக கற்று கொள்ளுங்கள்.

தளத்திற்கு செல்ல - www.babbel.com

Sunday, March 3, 2013

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

மாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் போகும் பாடப்பிரிவுகளில் என்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம் என்றும் சிந்திக்கத் தொடங்குவார்கள்.


குறிப்பாக பொறியியல் மாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக வங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை நாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்குவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்குவார்கள்.

இவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள் நூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது பிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய பக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப் படிக்கலாம்.

இவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை அறிய முடிந்தது. அவை இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை வேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ–புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.

www.ebooklobby.com என்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த தளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில் மிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக் கிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் இவை

கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? - உங்களுக்காகவே ஆன்லைனில் வீடியோ வகுப்பறைகள்




கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா?
உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ

வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.

மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக் கரம் நீட்டுகிறது.
this link click http://www.learnerstv.com/