Showing posts with label computer problem solution. Show all posts
Showing posts with label computer problem solution. Show all posts

Monday, March 18, 2013

கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig



யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த msconfig விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம்.




எதற்கு இந்த msconfig? 

உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.

இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

இது XP, Vista, Windows 7  வேறு விதமாக உள்ளதால் மூன்றையும் தருகிறேன்.

 XP பயனர்களுக்கு 

இதில் Run-->  msconfig

இப்போது கீழே உள்ள விண்டோ வரும்.  அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்

இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.

இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.
Vista பயனர்களுக்கு 

இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் run இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது start menu வில் search செய்யும் இடத்தில் முழுவதுமாக msconfig என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும். அதற்கு பின் செய்முறையில்  Windows 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே comment இல் சொல்லவும். 
Windows 7 பயனர்களுக்கு

இதிலும் Run-->  msconfig

இதில் வரும் புதிய விண்டோவில் Start up என்பது  கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே XP க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும். பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.

எந்த அளவுக்கு நீங்கள் Uncheck  செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் RAM வேகத்தை அதிகமாக்கும். முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள்.

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள்  கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்: 

  1. மிகக் குறைந்த Hard Disk Space
  2. நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது. 
  3. Data Corruption
  4. அதிக சூடாகுதல்
  5. Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல். 
  6. Hardware Problems
  7. Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம். 

Reboot :


உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம். 

Hard Disk Space


இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம். 

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB - 1GB காலியாக இருத்தல் நலம். 

Hard drive corrupted or fragmented


இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும். 

Run ScanDisk - இது Hard Disk - இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது. 

இதை செய்ய - My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc...) Properties>> Tools>> Error Check 

இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும். 

அந்த பகுதியில் வரும் "Automatically fix errors" என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag - இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc...) Properties>> Tools>>  Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து,  Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs


சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETEஅழுத்தி "Task Manager" பகுதிக்கு வரவும். இதில் "Applications" Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து "Go To Process" கொடுத்தால் "Process" பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து "End Process" தந்து விடும். 

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும்,  இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.

Virus பிரச்சினைகள் 


இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்


உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க  வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில்  "Device Manager" பகுதிக்கு செல்லவும்.

இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்


இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல் 


மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல் 


உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Propertiesஎன்பதில் General Tab-இல் பார்க்கவும்.

 Registry Cleaner பயன்படுத்துதல் 


பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில  Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில்CCleaner என்ற  Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.

Operation System இன்ஸ்டால் செய்தல்


மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள் 


மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.

பழைய கணினி 


உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.

அவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பின் கீழே கேட்கவும்.

Sunday, March 17, 2013

அனைத்து கணணி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் தளம் ?


கணணியை இப்பொழுது தான் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன் அதற்குள் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை என்று கூறுபவர்களுக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள தளம் ஒன்று உள்ளது.
கணணியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும் கூகுளில் சென்று தேடினேன் பல முடிவுகள் கொடுத்தாலும் என்னால் எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களும், புரோகிராமில் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று சொல்வபவர்களும் தீர்வை தேடி பல தளங்கள் செல்ல வேண்டாம்.
ஒரே தளம் அனைத்து கணணி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது. பிழை உதவி(Error Help) இதை தான் மையமாக வைத்து இந்த தளம் செயல்படுகிறது. மற்ற தளங்களைப் போல அல்லாமல் பிரச்சினையை நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக் கொடுக்கின்றனர்.
இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி உள்ளனர். எந்த தளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது, அதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு காட்டுகிறது.
நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை என்றால் 48 மணி நேரத்திற்குள் சரியான பதிலை கொடுக்க முயற்சி செய்கிறோம் என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத் தேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே காட்டுகின்றனர்.
அனைத்து கணணி பிரச்சினைகளுக்கும் இங்கே கிளிக் செய்யவும்.

Pen Drive ல் remove write protect problem sollution


நமது பென்ரைவில் அடிக்கடி ஏற்படும் பெரும்பிரச்சினையான “Remove write Protect” என்ற எச்சரிக்கை செய்தி பற்றியது. இவ்வாறு நாங்கள் முக்கிய பைல்களை கொப்பி பேஸ்ட் செய்யும்போது “Remove write Protect” என்ற செய்தி வில்லனாக வந்து நிற்கும். இதை எவ்வாறு சரிசெய்வது?
முதலில் Run க்கு சென்று மேலுள்ளவாறு type பண்ணி ok கொடுக்கவும். பின் வரும் window தெரியவரும் அதில்
HKEY_LOCAL_MACHINE என்பதற்கு முன்னால் உள்ள + அடையாளத்தினை சொடுக்கவும். பின்
system என்பதற்கு முன்னால் உள்ள + அடையாளத்தினை சொடுக்கவும். பின்
அதில் Control  என்பதற்கு முன்னால் உள்ள + அடையாளத்தினை சொடுக்கவும். பின்
அதில் எஸ் வரிசைக்கு சென்று StorageDevicePolicies கண்டுபிடித்து தெரிவுசெய்யவும்
அருகில் WriteProtect எனதெரியவரும்.கண்டுபிடித்துவிட்டீர்களா? அது மாறியிருப்பதாலேயே நம்மால் பென்ரைவில் வேலை செய்யமுடியவில்லை. அதில் Data மேலுள்ள படத்தில் உள்ளவாறு இருக்காது. அது 0*00000001(0) என மாறியிருக்கும். அதை மேலுள்ளவாறு மாற்றிவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும். அதற்கு WriteProtect மீது Double click அல்லது Right click செய்து Modify தெரிவுசெய்யவும். பின் தெரியவரும் window ல் value data 1 என இருக்கும் அதை பின்வருமாறு மாற்றிவிடுங்கள்.
பின் ஒகே கொடுத்து Registry Editor ல் இருந்து வெளியேறவும். இப்போது உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். தற்போது copy & past செய்யமுடியும்.

நீங்களும் கணினி பழுது பார்க்கலாம் part II


உங்கள் கம்ப்யூட்டரை Start செய்யும் போது “NTLDR missing, press ctrl+alt+delete to Restart” என்று வந்தால் என்ன செய்வீர்கள்?
NTLDR என்பது New Technology loader என்பதாகும். கம்ப்யூட்டர் Start ஆகும்போது BIOS ஆனது Harddrive ன் Active Partition MBR க்கான முதலாவது Sector ஜ Read செய்யும் பின்புதான் மற்ற Os பகுதிகள் Loading ஆகும். MBR ஆனது NTLDR ற்கு point செய்யப்பட்டுள்ளது. ஆகவேதான் NTLDR , Ntdetect.com போன்ற பூட்டிங் பைல்களில் ஏதாவது பிழை ஏற்படும் போதுதான் மேற்கூறிய Error message வருகிறது.
இப்படி பிரச்சனை வரும்போது விண்டோஸை புதிதாக நிறுவாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்தால் நீங்கள் “My document” ல் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பைல்களும் அளிந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு சிறந்த வளியொன்று உள்ளது.
•முதலில் கம்ப்யூட்டரை “Restart” செய்யுங்கள்
•பின்பு கம்ப்யூட்டரை ‘விண்டோஸ் CD’ மூலம் பூட்டிங் செய்யுங்கள்
•சிறிது நேரத்தில் Taskbar , Enter=Continue , R=Rapier , F3=Quit போன்றவற்றைக்
கொண்ட திரை தோன்றும்
•அப்போது ‘R’ என்பதை அளுத்துங்கள் பின்பு
•1 Windows என்பதும் அதற்குக்கீழ் Which windows installation would you like to log onto (to cancel, press Enter)? காணப்படும் இதில் 1 ஜ அளுத்துங்கள்.
•பின்பு உங்கள் “Administrator” பாஸ்வேடைக் கொடுத்து “Log on” செய்யுங்கள்.
•இனி C:\Windows> என்பதில் கீழுள்ள Code ஜ Type செய்யுங்கள்
Copy C:\I386\NTLDR H:\
Copy C:\I386\NTDETECT.COM H:\
என்று Type செய்து Enter செய்தால் சரி.
இனி Exit எனறு Type செய்தால் இதை விட்டு வெளியேறலாம். அல்லது ‘Restart’ செய்யுங்கள். இப்போது உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.
குறிப்பு : இங்கு H என்பது “CD Rom Drive” ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் CD Rom Drive ஆக எது உள்ளதோ அதைக் கொடுத்தால் சரி.
குறிப்பு : இங்கு C என்பது எனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் install செய்துள்ள Drive ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் எந்த Drive ல் விண்டோஸ் install செய்துள்ளீர்களோ அதைக் கொடுத்தால் சரி.
இந்த இரண்டையும் சரியாகக் கொடுப்பது மிகவும் அவசியம்

நீங்களும் கணினி பழுது பார்க்கலாம் part I



கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில ஹார்டுவேர் பாகங்களில் கோளாறு என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைதது நாம் கணனியில் எங்கு சிக்கல் இருக்கிறது என நாமே கண்டுபிடித்து விடலாம்.
  1. ஒரு பீப் ஒலி – ரம் றீபிரஸ் செய்வதில் பழுது நேரிட்டிருக்கலாம். இதனை சரி செய்ய ரம்மை (ram) கழற்றி விட்டு மீண்டும் பொருத்துங்கள்.
  2. இரண்டு பீப் ஒலி – பார்ட்ரி செர்க்கிட்டில் பிழை ஏற்படடிருக்கலாம். இதனை சரி செய்ய ரம்மை கழற்றி விட்டு மீண்டும் பொருத்தி பார்க்கவும்.
  3. மூன்று பீப் ஒலிகள் – பேஸ் ரம்மில் பழுது ஏற்பட்டிருக்கலாம்.இதனை சரி செய்ய ரம்மை கழற்றி மீண்டும் பொருத்தி பார்க்கவும். சரியாகவிடில் புதிய ரம் பொருத்த வேண்டும்.
  4. நான்கு பீப் ஒலிகள் – சிஸ்டம் டைமரில்(System Memory)பிழை ஏற்பட்டிருக்கலாம். இதனை சரி செய்ய சிஸ்டம் போர்டினை சரி செய்ய வேண்டும்.
  5. ஐந்து பீப் ஒலிகள் – புரொஸசரில் பிழை ஏற்பட்டிருக்கலாம். இதனை சரி செய்ய சிஸ்டம் போர்டினை ஆராய வேண்டும்.
  6. ஆறு பீப் ஒலிகள் – கிபோர்டின் கொன்ரோலர் மற்றும் கேட் A-20 இல் பிழையிருக்கலாம். இதனை சரி செய்ய கீபோர்ட் கொன்ரோலர் சிப்பினை சரி செய்ய வேண்டும்.
  7. ஏழு பீப் ஒலிகள் – வேர்சுவல் மோட் எக்செப்சனில் பழுது நேரிட்டிருக்கலாம். எட்டு பீப் ஒலிகள் – டிஸ்பிலே மெமரியின் பகுதியில் பிமை ஏற்பட்டிருக்கலாம். இதனை சரி செய்ய விடியோ கார்டினை (VGA Card) கழற்றி மீண்டும் பொருத்தி பார்க்கவும்.
  8. ஒன்பது பீப் ஒலிகள் – பயாஸ் சிப்பில் பிழை இருக்கலாம். சரி செய்ய மதர்போர்டின் பயாஸ் சிப்பினை மாற்ற வேண்டும்.
  9. பத்து பீப் ஒலிகள் – சீமாஸ் சட் டவுண் Registaryயில் தவறு ஏற்பட்டிருக்கலாம். சரி செய்ய சிஸ்டம் போர்டினை சரி செய்ய வேண்டும்.
  10. இடைவிடாது நீண்ட பீப் ஒலி – வீடியோ பகுதியில் பழுது ஏற்பட்டிருக்கலாம். சரி செய்ய வீடியோ கார்ட்டை(VGA Card) அகற்றிவிட்டு மீண்டும் பொருத்தவும்.