Showing posts with label pendrive tips and tricks. Show all posts
Showing posts with label pendrive tips and tricks. Show all posts

Saturday, March 16, 2013

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?


 

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

Friday, March 15, 2013

ஆன்லைன் மூலம் Id card ( அடையாள அட்டை ) எளிதாக உருவாக்கலாம்.



 சிறிய நிறுவனத்தில் இருந்து பெரிய நிறுவனம் வரை அனைத்திற்கும்
 அடையாள அட்டை என்ற ஒன்று தற்போது முக்கியனமான ஒன்றாக
 மாறி வருகிறது இந்த அடையாள அட்டையை எளிதாக நாமே
 வடிவமைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

 சாதாரனமாக கணினி பயன்படுபத்துபவர்களையும் கணினி மேதைகள்
 ஆக்க வேண்டும் என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு தான்
 வின்மணி பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த
 வகையில் இன்று எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
 யாருடைய கிராபிக்ஸ் உதவியும் இன்றி எளிதாக அதுவும்
 சில நிமிடங்களில் நம் நிறுவனத்திற்கு தேவையான அடையாள
 அட்டையை நாமே வடிவமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக
 ஒரு தளம் உள்ளது.
 இணையதள முகவரி : http://bighugelabs.com/badge.php
 இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் நிறுவனத்தின் பெயர், எந்த
 வண்ணத்தில் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்பதையும்
 மற்றும் இதரத் தகவல்களை கொடுத்து Create என்ற பொத்தானை
 சொடுக்கி எளிதாக அதுவும் சில நிமிடங்களில் அடையாள அட்டை
 உருவாக்கலாம்.அடையாள அட்டை உருவாக்க்க விரும்பும்
 அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, March 9, 2013

Pen Drive Security - Autorun.inf


இப்பொழுது அனைவரின் கைகளிலும் பென் டிரைவ் புழங்குவது, நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு சிறு அடையாளமே.ஒரு  குறிப்பிட்ட  கணினியிலிருந்து, தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக சேமித்துக் கொள்ள CD/DVD ஆகியவற்றை விட ஒரு சிறந்த எளிய சாதனமாக இருப்பது இந்த Flash/Pen டிரைவ்கள்தான்.


ஆனால், இந்த பென் டிரைவ்களின் மூலமாகவே பெரும்பாலான NewFolder.exe virus, kinza.exe virus, W32.Rontokbro.B@mm virus,  Regsvr.exe போன்ற வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் வெகு விரைவாக உங்கள் கணினியை தாக்குகின்றன. இது போன்ற மோசமான பாதிப்புகளை உருவாக்கக் கூடிய இந்த வைரஸ்கள் விரைவாக, நமது கண்காணிப்பை மீறி நமது கணினியில் பரவுவதற்கு அதில் உள்ள Autorun.inf என்ற ஃபைல் தான் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி என்னதான் சக்தி இருக்கிறது இந்த Autorun.inf கோப்பில் என்று பார்த்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windows 95 பதிப்பு வெளி வந்த பொழுது, இது புழக்கத்திற்கு வந்தது. அதாவது, விண்டோஸ் 95 இயங்குதளத்தில்  CD யை திறப்பதற்கு முன்பாகவே அல்லது அந்த சிடியை My Computer -ல் இரட்டை க்ளிக் செய்யும் பொழுது,    இந்த Autorun அந்த CD யின் ரூட் டைரக்டரியில் உள்ள Autorun.inf  கோப்பை படித்து அதில் தரப்பட்டுள்ள கட்டளைகளை செயல்படுத்தும் பங்காற்றுகிறது. உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஒரு Autorun.inf கோப்பில் உள்ள கட்டளைகள்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
label= My Thumb Drive(98XXXXXXXX)
   

ஒரு பாதிக்கப்பட்ட பென் ட்ரைவை நல்லதொரு Antivirus மற்றும் Anti malware  உள்ள கணினியில் திறந்து, Tools -> Folder Options சென்று Show hidden files and folders க்ளிக் செய்து விட்டு, அதில் உள்ள கோப்புகளின் விவரங்களை பார்க்கும் பொழுது,


Hidden வடிவில் அந்த பென் டிரைவில் உள்ள வைரஸ்களை (நமக்கு சம்பந்தமில்லாத / நாம் உருவாக்காத கோப்புகள்) காண முடியும். (இப்படி காண்பிப்பது போல, வைரஸ் தாக்கப்பட்ட கணினியில் காண்பிக்காது. அவற்றில் Folder Options வசதி நீக்கப் பட்டிருக்கும்.) இவற்றை நமது கணினியில் ஏற்றுகின்ற வேலையை இந்த Autorun.inf கோப்புகள் செய்கின்றன.

இப்படி சந்தேகமுள்ள பென் ட்ரைவ்களை நமது கணினியில் இணைத்த பிறகு, நேரடியாக My Computer -இல் சென்று திறக்காதீர்கள். Start -> Run இற்கு சென்று அந்த பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை கொடுங்கள் (H:) இனி திறக்கும் Explorer -இல் மேலே குறிப்பிட்டிருப்பது போல, Show hidden files and folders என்ற வசதியை enable செய்து கொள்ளுங்கள். இனி அந்த பென் டிரைவில், உங்களுக்கு சம்பந்தமில்லாத, .EXE கோப்புகள் ஸ்கிரிப்ட் கோப்புகளை shift+del கொடுத்து நீக்கி விடுவது நல்லது.    

இது போன்ற தாக்குதல்களிலிருந்து நமது கணினியை காக்க No Autorun என்ற இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இந்த மென்பொருள் கருவியை நமது கணினியில் பதிந்து கொள்வதன் மூலமாக இது போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பலாம்.

PenDrive Tricks: Hide your personal files


இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.





அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.




Pentraiv Tricks: Shortcut folder solution for vulnerability


பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 
பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 
ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 





டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 

Friday, March 8, 2013

TAMIL NEWS WIDGED



பொதுவாக என்மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல் வருகின்றன அவற்றில் பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இதுதான் "பல முன்னனி தளங்கள் உடனுக்குடன் செய்திகளை தங்கள் தளங்களில் வெளிவிடுகின்றன அவற்றை நமது பிளாக்கிளும் வரவழைக்க முடியுமா?"


ஆம் நண்பர்களே இந்த வசதியை மிகவும் எளிமையான முறையில் நமது பிளாக்கில் வர வழைக்க முடியும். இதைத்தான் ஆங்கிலத்தில் "நியூஸ் பீட்ஸ்" என்கின்றோம் இதனை பயன்படுத்தி எந்த மொழி செய்திகளையும் நமது பிளாக்கில் உடனுக்குடன் அப்டேட் செய்யுமாறு வகைப்படுத்தலாம். தமிழர்களுக்காக சுட சுட தமிழில் உலகம், வணிகம்,தமிழ் நாடு,விளையாட்டு செய்திகளை பெற பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.
இந்த வசதியினை கூகில் "நியூஸ் ஃபீட்ஸ்" நிருவனம் நமக்கு இலவசமாக தருகின்றன இதனை நீங்கள் அப்டேட் செய்யவேண்டியதில்லை அதுவே தானாகவே பல செய்தி தளங்களின் புதிய தலைப்புச்செய்திகளை தமிழில் உங்கள் தளங்களின் பக்கங்களில் அப்டேட் செய்யும்.



1) goto blogger acount click " layout"



2) click "add gadget---->feed"






3)தமிழ் நாட்டு செய்திகளை உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=tn&output=rss



4)உலக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=w&output=rss



5)விளையாட்டு செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=s&output=rss



6)வணிக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=b&output=rss





7)சினிமா பற்றிய செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=e&output=rss