Sunday, March 17, 2013

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா என்று அறிய மிக இலகுவான வழி


நாம் install செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code (சிகப்பு நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும். பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும். அல்லது உங்கள் கண்ணனியில் வைரஸ் புகுந்துள்ளதாக எச்சரிக்கை வரும். அப்படி எதுவுமே ஆகவில்லையென்றால் உங்கள் antivirus ஒரு சோம்பேறிப் புரோகிறாம் என்று அர்த்தம். உடனடியாக உங்களின் antivirus புரோகிறாமை அழித்துவிட்டு வேறு ஒரு நல்ல இலவசமான antivirus டவுன்லோட் செய்து பதிந்துகொள்ளுங்கள்.

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி

நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன். இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்
முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி
பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.  கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.
AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும். Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.
இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.
பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.
இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.
பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்
அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் – 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.
அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.
அந்த கணினியை வலது கிளிக் செய்து  Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் – 12345@12345)  அதை இங்கே கொடுங்கள் முடிந்தது.
இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்
இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.
இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.
ஜிபிரிட்ஜ் மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் மூலமாக நிறைய பயன்கள் உண்டு நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.
ஜிபிரிட்ஜ் குறித்த விக்கிபீடியாவின் விரிவான பதிவு சுட்டி

free software download


நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை
வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தரவிறக்குவதில் என்ன பிரச்சினை என்றால்
சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி
விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க
பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம்
செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன். 10. DOWNLOAD 3000 – RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில்
WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து
கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.
http://www.download3000.com/
9. SOFT32- RANK 3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில்
WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம்
செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.
http://www.soft32.com/
8. DOWNLOAD ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில்
WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம்
செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.
http://www.downloadatoz.com/
7. DL 4 ALL- RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில்
WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம்
செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.
http://www.dl4all.com/.
6. FREE DOWNLOAD CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில்
WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து
கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்
http://www.freedownloadscenter.com/
5. ZDNET – RANK 1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில்
WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம்
செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.
http://downloads.zdnet.com/
4. FILE HIPPO – RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளம்
செல்ல இந்த லிங்கில் செல்லவும்.
3. SOFTPEDIA – RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று
விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.
http://www.softpedia.com/
2. BROTHER SOFT – RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச
மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த
லிங்கில் செல்லவும்.
1. CNET – RANK 159
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின்
அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த
லிங்கில் செல்லவும்.
http://download.cnet.com/

WIRELESS ஒரு பார்வை

(கம்பில்லா தொடர்ப்பு வசதி -WIRELESS )
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமாக ஆகிவிட்டது  .இதில் WIRELESS சின் பங்கு அதிகரித்து.வருகிறது.
WIRELESS   எங்கெல்லாம்  இதன்னுடய பங்கு   உள்ளது என்று பார்ப்போம்.
அவை,
  • WIRELESS BROADCASTING
  • CELLULAR BROADCASTING
  • BLUETOOTH TECHNOLOGY
  • WIFI
  • SHORT RANGE POINT TO POINT COMMUNICATION.

Pen Drive ல் remove write protect problem sollution


நமது பென்ரைவில் அடிக்கடி ஏற்படும் பெரும்பிரச்சினையான “Remove write Protect” என்ற எச்சரிக்கை செய்தி பற்றியது. இவ்வாறு நாங்கள் முக்கிய பைல்களை கொப்பி பேஸ்ட் செய்யும்போது “Remove write Protect” என்ற செய்தி வில்லனாக வந்து நிற்கும். இதை எவ்வாறு சரிசெய்வது?
முதலில் Run க்கு சென்று மேலுள்ளவாறு type பண்ணி ok கொடுக்கவும். பின் வரும் window தெரியவரும் அதில்
HKEY_LOCAL_MACHINE என்பதற்கு முன்னால் உள்ள + அடையாளத்தினை சொடுக்கவும். பின்
system என்பதற்கு முன்னால் உள்ள + அடையாளத்தினை சொடுக்கவும். பின்
அதில் Control  என்பதற்கு முன்னால் உள்ள + அடையாளத்தினை சொடுக்கவும். பின்
அதில் எஸ் வரிசைக்கு சென்று StorageDevicePolicies கண்டுபிடித்து தெரிவுசெய்யவும்
அருகில் WriteProtect எனதெரியவரும்.கண்டுபிடித்துவிட்டீர்களா? அது மாறியிருப்பதாலேயே நம்மால் பென்ரைவில் வேலை செய்யமுடியவில்லை. அதில் Data மேலுள்ள படத்தில் உள்ளவாறு இருக்காது. அது 0*00000001(0) என மாறியிருக்கும். அதை மேலுள்ளவாறு மாற்றிவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும். அதற்கு WriteProtect மீது Double click அல்லது Right click செய்து Modify தெரிவுசெய்யவும். பின் தெரியவரும் window ல் value data 1 என இருக்கும் அதை பின்வருமாறு மாற்றிவிடுங்கள்.
பின் ஒகே கொடுத்து Registry Editor ல் இருந்து வெளியேறவும். இப்போது உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். தற்போது copy & past செய்யமுடியும்.