Saturday, March 9, 2013

CAD class III

Absolute Co-ordinate System என்பது என்ன என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம்.

இரண்டாவதாக Absolute Co-ordinate System ஐ விட சற்று எளிதான ஒரு Co-ordinate system..,

Relative Co-ordinate System (syntax: @dx,dy) 

இந்த முறையில், '@' (Shift+2) என்பது கடைசியாக நாம் கொடுத்த புள்ளியை குறிக்கிறது. அதாவது கடைசியாக நாம் குறித்த புள்ளியிலிருந்து, தற்பொழுது நாம் குறிக்கப் போகும் புள்ளிக்கு இடையே உள்ள X அச்சின் தொலைவு, Y அச்சின் தொலைவு. (X=Horizontal Distance; Y=Vertical Distance என வைத்துக் கொள்ளலாம்).



மேற்கண்ட வரைபடத்திற்கு இந்த Relative Co-ordinate system ஐ உபயோகித்து புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.

A (0,0)
B @60,0
C @0,40
D @-60,0
A @0,-40

அதாவது A என்ற புள்ளியை Absolute Co-ordinate system -ல் குறித்திருக்கிறோம்.

B புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் A என்ற புள்ளி (B க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் A யிலிருந்து B க்கு X தொலைவு 60 ஆகும். Y தொலைவு 0 ஆகும்.

C புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் B என்ற புள்ளி (C க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் B யிலிருந்து C க்கு X தொலைவு 0 ஆகும். Y தொலைவு 40 ஆகும்.

D புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் C என்ற புள்ளி (D க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் C யிலிருந்து D க்கு X தொலைவு -60 (Opposite Direction) ஆகும். Y தொலைவு 0 ஆகும்.

மறுபடியும் A புள்ளியை கொடுத்தால்தான் செவ்வகம் பூர்த்தியாகும் எனவே,
A புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் D என்ற புள்ளி (A க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் D யிலிருந்து A க்கு X தொலைவு 0 ஆகும். Y தொலைவு -40 (Opposite Direction) ஆகும்.

'@' ஐ உள்ளீடு செய்தவுடன், AutoCAD '@' ஐ தொடர்ந்து கொடுக்கப்படும் புள்ளிகளை Relative System ல் எடுத்துக் கொள்கிறது.

இப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Relative Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.


முடிந்தால் இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த முறையை விட எளிதான முறையை அடுத்த இடுகையில் பார்த்த பின்னர், AutoCAD -ல் வரைபடங்களை உருவாக்கும் முறைகளைப் பார்க்கலாம். அதற்குள்ளாக இந்த இரண்டு முறைகளையும் உபயோகித்து, வேறு சில வரைபடங்களுக்கு புள்ளிகளை குறிக்க முயற்சித்துப் பாருங்கள். இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment