Wednesday, March 13, 2013

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்.

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நாமும் , ஆன்லைன் மூலம்
பொருட்கள் விற்கும் நிறுவனமும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பற்றிதான் இன்றைய சிறப்பு
பதிவு.

ஆன்லைன் மூலம் சேலை வாங்குவதில் தொடங்கி தங்கநகை
வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைனிலே வந்துவிட்டது
இருந்தும் இன்றும் பல பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை
விரும்புவதில்லை , எந்த பொருள் வேண்டுமோ அந்த பொருளுக்கான
பணத்தை எங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில்
செலுத்துங்கள் என்று கூறுகின்றனர். பல வெளிநாட்டு நிறுவனங்களும்
இதே போல் தான் இருக்கின்றனர், உடனே நாம் கூறுவது
தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடையாதவர்கள் என்று, நிச்சயமாக
இல்லை அவர்கள் தொழில்நுட்பத்தின் அத்தனை பரிணாமமும்
அறிந்தவர்கள் எப்படி என்று சற்று விரிவாக பார்ப்போம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் கொள்ளை அடிப்பதை ஆரம்பித்தவர்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள் தான்.
ஆன்லைன் வர்த்தகத்தில் இவர்களிடம் தப்பாத எந்த நிறுவனமும்
இல்லை என்றே கூறலாம், ஆனால் இவர்கள் முன்பு பயன்படுத்திய
முறையைத்தான் நைஜிரியா நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள்
இப்போது பயன்படுத்துகின்றனர். நைஜிரியா நாட்டு கொள்ளையர்கள்
சிறிய அளவு பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் கம்பி எண்ணிய விசயம்
நாம் அறிந்ததே, ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு கொள்ளையர்கள்
தற்போது செய்வது ஐபி புரொட்டோகோலில் இருக்கும் ஓட்டைகளை
பயன்படுத்தி எந்த இணையதளத்தை முடக்க வேண்டும் இதற்கு
எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்ற வேகத்தில் சென்று கொண்டு
இருக்கின்றனர்.மிகப்பெரிய நிறுவனமான கூகிளே படாதபாடு
படுத்திவிட்டனர் என்றால் நம் நிறுவனத்தின் தளத்தை பாதுகாப்பது
எவ்வளவு கடினமான முயற்சி என்று நமக்கு தெரியும். சில
நிமிடங்களில் உங்கள் வங்கியின் கணக்கில் உள்ள பணத்தை
திருடும் அளவு முன்னேறி இருக்கின்றனர். நாளையப் பதிவில்
இதைப்பற்றி மேலும் சற்று விரிவாக பார்க்கலாம்.ஆன்லைன் மூலம் எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தி கொள்ளை
அடிக்கின்றனர் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம் இன்றும்
அதன் தொடர்ச்சியாக இதன் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி
இந்தப்பதிவில் பார்க்கலாம்.

’ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி
பற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது
என்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை
தடுப்பதற்கான சில வழிமுறைகள்.
வழிமுறைகள்:
* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி
கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.
* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி
கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும்
மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.
* Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்
இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும்
கூடவே வருகின்றது.
*  பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று
ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.
*  கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ்
வந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்
அழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே
வேலையைத்தான் செய்யும்.
* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது
Restart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்
இருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்
Install செய்து கொள்ளுங்கள் ).
* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.
ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.
* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை
தவிர்க்க பாருங்கள், பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox
உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.
* லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்
ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுக்காதீர்கள். இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment