Tuesday, March 12, 2013

Facebook நண்பர்களின் பிறந்ததினங்களை Google Calendar இல் இணைத்தல்.



Facebook நண்பர்களின் பிறந்ததினங்களை  எவ்வாறு நாம் Google Calendar இல் இணைத்துக் கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம். இவ்வாறு இணைப்பதால் நாம் அடையப் போகும் நன்மை பற்றி அதாவது அனைவருக்கும் தேவையான ஒன்றைப் பற்றி அடுத்துவரும் பதிவினூடாகப் பார்ப்போம். அதுவரை இதனை செய்துவிட்டு பொறுமையுடன் இருங்கள்.

முதலில் உங்கள் Facebook கணக்கினுள் நுழைந்து கொள்ளவும். இப்போ கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு இடது பக்கத்தில் உள்ள “Events” என்பதைக் கிளிக் செய்யவும்.



இப்போ உங்களுக்கு அடுத்த பக்கம் தோன்றும். இதிலே கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு நட்சத்திர வடிவினை கிளிக் செய்து தொடர்ந்து காட்டியவாறு உள்ள “Export” என்பதைக் கிளிக் செய்யவும்.



இப்போ கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு ஓர் விண்டோ தோன்றும். இதிலே பச்சை வட்டமிட்டுக் காட்டிய இணைப்பின் மேல் வைத்து Right Click செய்து Copy செய்து கொள்ளவும்.



இப்போ உங்கள் Google Calendar இனுள் நுழையவும்.(உங்கள் Gmail கணக்கினுள் நுழைந்துகொண்டால் அதன் மேல் Bar இல் உள்ள Calendar என்பதைக் கிளிக் பண்ணி உட் செல்லவும்.)

இப்போ கீழ் காட்டியவாறு இடதுபக்கத்தில் உள்ள “Other Calendars” என்பதில் காட்டப்பட்ட இடத்தில் கிளிக் செய்யவும். இப்போ உங்களுக்கு தோன்றும் நிரலில் உள்ள “Add by URL” என்பதைக் கிளிக் செய்யவும்.



இப்போ கீழ் காட்டியவாறு உள்ள இடைவெளியில் நீங்கள் Copy செய்த இணைப்பை Paste செய்து பின்னர் Add Calendar என்பதைக் கொடுக்கவும்.



அவ்வளவுந்தான். இப்போ உங்கள் Facebook இல் உள்ள நண்பர்களினது பிறந்ததின நாட்கள் Google Calendar இல் பதியப்பட்டுவிடும்.

இதில் சிறப்பு என்னவென்றால்; புதிதாக நண்பர்கள் உங்கள் Facebook கணக்கில் இணையும் போது அவர்களின் பிறந்த நாட்களும் தன்னிச்சையாகவே பதியப்படும்.

ஆம் நண்பர்களே! இதன் அடுத்த பிரதானமான தொடரை அடுத்துவரும் பதிவினூடாகப் பார்ப்போம். தவறாமல் காத்திருங்கள். தவறவிடாதிருக்க Facebook இல் விருப்பம் தெரிவியுங்கள் அத்துடன் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்துவிடுங்கள்.....
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment