Sunday, March 17, 2013

Download any file from any site


இணையத்தில் உள்ள நமக்கு தேவையான படங்கள், பாடல்கள், வீடியோக்கள், மென்பொருட்கள், விளையாட்டுக்கள் இப்படி ஏராளமான பைல்களை டவுன்லோட்செய்ய  ஏதாவது மென்பொருளோ அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தின் உதவியோடு டவுன்லோட் செய்வோம்.ஆனால் ஒவ்வொரு வகை பைலை டவுன்லோட் செய்ய தனி தனி தளங்களுக்கு சென்று தான் டவுன்லோட் செய்ய முடியும்.
இதனால் நம் நேரம் தான் அதிகமாக செலவிடப்படும் இனி அப்படி செல்ல வேண்டியதில்லை. நமக்கு தேவையான அனைத்து வகை பைலையும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்த கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து முதலில் இந்த தளம் செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
  • முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் பைல் உள்ள  இணைய பக்கத்தின் URL கொடுக்கவும்.
  • அடுத்து கீழே சிறிய கட்டத்தில் டிக் குறி இடவும்.
  • கீழே Filter என்ற பகுதியில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் பைல் வகையை தேர்ந்தெடுக்கவும். இதில் All files என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அடுத்து அங்கு உள்ள Get files என்ற பட்டனை அழுத்தவும். உடனே அந்த இணைய பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்த டவுன்லோட் பைல்களின் லிங்க்குகள் வரும்.
  • இதில் உங்களுக்கு தேவையான பைலின் மீது உங்கள் கர்சரை வைத்து ரைட் க்ளிக் செய்து Save Target as (or) Save Link as என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் விரும்பிய பைலை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் File 2 HD செல்லவும்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment