இதற்கு என்ன செய்யலாம்?
வழிமுறை: 1
உதடுகள் சுருங்கி காணப்பட்டால் உங்கள் உடலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது என்று பொருள். இவற்றைப்போக்க வெளிப்புறத்திலிருந்து உதடுகளுக்கு ஊட்டம் கொடுக்க முடியும். வாசலின் தடவுவதன் மூலம் அதை சமன் செய்து உதட்டுச் சுருக்கத்தைப் போக்கலாம்.
வழிமுறை: 2
உடல்நல குறைவுக்கும், உடல் அதிக உஷணம் அடைவதற்கு முதல் முக்கியகாரணம், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதுதான். அதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வகைகளை உண்டு வந்தாலே எந்த உடல் பிரச்னைகளும் இல்லாமல் நலமாக வாழ முடியும்.
வழிமுறை: 3
வெயில் மற்றும் வெப்பத்தால் உதடுகள் கறுத்து போவதை தவிர்க்க இயலாது. இவ்வாறு உதடு கறுத்துப்போவதிலிருந்து காத்து, சிவப்பான உதடுகளைப் பெற ஒரு ஸ்பூனில் பாலேடும், நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, நாள்தோறும் உதடுகளில் அக்கலைவை பூசி வர உதட்டின் கருமை நிறம் வெகுவிரைவில் மறையும்.
வழிமுறை: 4
ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறும், உப்பு கலக்காத வெண்ணெயும் எடுத்து அவை இரண்டையும் கலக்கி, ஒரு கலவையாக்குங்கள். அக்கலவையை வறண்டு, உலர்ந்து, கறுமையாக மாறிய உதடுகளின் மேல் பூசி வர, உதடு வெடிப்பு, உதடு கறுமையாதல்.. போன்ற உதட்டுப் பிரச்னைகள் குணமடைந்து, உதடுகள் நல்ல இயற்கையான நிறத்தைப் பெறும்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
No comments:
Post a Comment