Saturday, March 9, 2013

CAD class II


எந்த ஒரு வரைபடத்தை எடுத்துக் கொண்டாலும் அது Line, Point மற்றும் Arcகளினால் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். எனவே, ஒருவரைபடத்தை எளிதாக வரையறுக்க வேண்டுமெனில் 'Lines & Arcs' எனவைத்துக் கொள்ளலாம். இவற்றை மாறுபட்ட இடங்களில், மாறுபட்டகோணங்களில் அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான வரைபடத்தைஉருவாக்க, எனக்குத் தெரிந்த முறையில் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒருசிறு முயற்சிதான் இந்த பதிவு. (வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடரும்!)

ஒரு Line ஐ வரைய வேண்டுமெனில் நமக்கு அதன் துவக்கப் புள்ளியும், இறுதிப்புள்ளியும் தெரிந்திருக்க வேண்டும். (ஒரு Line இன் Start point மற்றும் End Point தெரிந்தால், நமக்கு அதன் கோணமோ(Angle), அளவோ தெரிய வேண்டியதில்லை). இதனை Co-ordinates என வைத்துக் கொள்வோம். AutoCAD ஐ பொறுத்தமட்டில் ஒரு வரைபடத்தில் குறிப்பிட்ட object -இன் இருப்பிடம் x,y Co-ordinates இனால் நிர்ணயிக்கப்படுகிறது. இது AutoCAD-ல் World Co-ordinate System (WCS) என வரையறுக்கப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் CAD மிக எளிதாகிவிடும்.

முதல் இரு பதிவுகளில் CAD -இன் அடிப்படை பாடங்களை பார்க்கப்போவதால், சிறிது போரடித்தாலும், மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

AutoCAD-ல் குறிப்பிடும்படி மூன்று Co-ordinate System-கள் உள்ளன.

முதலாவது,

Absolute Co-ordinate system:- (Syntax: x,y)

இந்த முறை வரைபடத்தாளில் (Graph Sheet) x,y புள்ளிகளைக் குறித்துக்கொண்டு பின் அந்த புள்ளிகளை இணைக்கும் வகையில் கோடு வரைவது போல் ஆகும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள், இது 60 x 40 அளவு கொண்ட ஒரு செவ்வகமாகும்.


Absolute Co-ordinate system ஐ உபயோகித்து A,B,C மற்றும் D Co-ordinates ஐ தெரிந்து கொள்வது எப்படி? கீழேயுள்ள படத்தை கவனியுங்கள்.


இதில் A என்ற புள்ளி X அச்சில் 0 விலும் Y அச்சில் 0 விலும் உள்ளது, அதாவது A(0,0) [0,0 என்பது Origin], B என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளது, அதாவது B(60,0). C என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் C(60,40). D என்ற புள்ளி X அச்சில் 0 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் D(0,40) ஆகும்.

அதாவது முதலில் சொன்ன 60 x 40 செவ்வகத்தை வரைய நமக்கு தேவைப்படும் புள்ளிகள்.

A(0,0)
B(60,0)
C(60,40)
D(0,40)

இப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.
இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.


வாசகர்களின் ஆர்வத்தைப் பொறுத்துஅடுத்தப் பதிவில் சந்திப்போம்.

AutoCAD சம்பந்தமான நண்பரின் வலைப்பதிவை காணhttp://cadlearn.blogspot.com
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment