Sunday, March 3, 2013

இமேஜ் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய

நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்போம், அதில் நாம் ஒரு சில எழுத்தையோ அல்லது வார்த்தையையோ மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்ற வேண்டிய டாக்குமெண்டை எளிமையாக மாற்ற முடியும். இதனை நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது போட்டோ எடிட்டிங் மென்பொருள் துணைகொண்டு மட்டுமே மாற்றுவோம் இதற்கு பதிலாக, இமேஜ் பைலை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக ஆன்லைனிலேயே மாற்றம் செய்ய சுட்டி. இவ்வாறு செய்வதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை இணைய இணைப்பு இல்லாமல் செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக எளிதாக இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற முடியும்

மென்பொருளை தரவிறக்க சுட்டி.
 சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து பின் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஒப்பன் செய்யவும். பின் OCR என்னும் பொதியை அழுத்தவும். அந்த படமானது டெக்ஸ்ட் பைலாக மாற்றப்பட்டுவிடும். பின் Export Text into Microsoft Word என்னும் பொதியை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்
.

 மேலும் இந்த OCR to Word மென்பொருள் மூலமாகவே ஸ்கேன் செய்து வேர்ட் பைலாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்
 
 
 
 
 இந்த மென்பொருள் மூலமாக எளிமையாக இமேஜ் பைல்களை வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இணைய இணைப்பு ஏதும் தேவை இல்லை
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment